Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீட்டுவந்த காவல்துறையினர்…. தொழிலதிபருக்கு டாட்டா காட்டிய மனைவி…. மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓட்டம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் கனியான் விளை பகுதியில் மோகன்ராஜ்- சோனியா காந்தி தம்பதியினர் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். மோகன்ராஜ் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி வீட்டில் இருந்த மோகன்ராஜ் மனைவி 45 சவரன் நகை, 13,00,000 ரூபாய் மற்றும் அவரது மகளுடன் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து மோகன்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அவர்கள் இருவரையும் தேடினர்.

ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மோகன்ராஜ் தன்னுடைய மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஹேபியர் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து டெல்லியில் இருந்தவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சோனியா காந்தி மற்றும் அவருடைய மகள் மோகன்ராஜிடன் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து கடந்த 27-ஆம் தேதி அன்று குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதாக கணவரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற சோனியாகாந்தி மீண்டும் கள்ளக்காதலனை மார்த்தாண்டம் பகுதிக்கு வரவழைத்து, அவருடன் சென்றுவிட்டார்.

நீண்ட நேரமாகியும் சோனியா காந்தி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த மோகன்ராஜ், 2-ஆவது முறையாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் வீட்டிலிருந்த 10,000 ரூபாய் மற்றும் 12 சவரன் தாலி செயினை எடுத்து சென்றுள்ளதாகவும், 2 குழந்தைகளையும் விட்டு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |