நாடு முழுவதும் கொரோனா காரணமாக பலரும் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான கோல்டு மேன் சாக்ஸ் இந்தியாவில் 2500க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் ஹைதராபாத்தில் புதிய அலுவலகத்தை அமைத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அலுவலகத்தில் 2023ஆம் வருடத்திற்குள் சுமார் 2,500க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொறியியல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான சர்வதேச மையமாக ஹைதராபாத்தில் உள்ள இதனுடைய அலுவலகம் செயல்படும் என தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளை கடைப்பிடித்து கடந்த மார்ச் மாதம் முதல் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 250 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தா வருடத்தின் முடிவுக்குள் 800 புதிய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்பின் 2023ஆம் ஆண்டுக்குள் 2,500 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.