Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவி… 5 சவரன் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் கொள்ளை… ஆம்பூரில் பரபரப்பு..!!

பூட்டியிருந்த வீட்டில் மிளகாய் பொடி தூவி 5 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு உடல்நலம் சரி இல்லாமல் பாபு இறந்துள்ளார். இந்நிலையில் பாபுவின் இரண்டாவது மனைவி சங்கீதாவின் வீட்டின் முன்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டினுள்ளே மிளகாய் பொடி தூவி பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து சங்கீதாவின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் உமராபாத் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |