ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சிறுவாச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான ராஜசேகர், அவரது மனைவி, 2 மகள்கள், 2 மகன்கள், பேரன், பேத்தி ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ராஜசேகரின் இளைய மகளை அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருதரப்பினரையும் நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது காதலித்ததாக கூறப்படும் நபரின் நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது எனது நண்பரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என்று கூறி 6 மாத காலமாக எங்களை மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.