தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.நீ.ம அறிக்கை வெளியிட்டுள்ளது..
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குச் சென்ற திமுக தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசுவதுடன், கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
பொறுப்புமிக்க சட்டப்பேரவை உறுப்பினர், தனியார் நில குத்தகை விவகாரத்தில் பஞ்சாயத்து பேசச் சென்றதும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரை மிரட்டுவதும் ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருந்தாலும் திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்துகிறது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அத்துமீறி நடந்துகொள்வதும், மிரட்டல், தாக்குதல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. இது தமிழக அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும். எனவே, இவற்றைத் தடுத்து நிறுத்துவதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்துவது அவசியம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டும் திமுக எம்எல்ஏ! @srrajamla
ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும். @CMOTamilnadu @mkstalin @tnpoliceofflமக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் @Thangavelukovai அறிக்கை.#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNM4Justice #MNMTweets pic.twitter.com/YOQGR7pbL5
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) September 23, 2022
தனியார் நிறுவன ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசி கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா;
எம்எல்ஏ மிரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் pic.twitter.com/0RHuzRngKx
— ஆசைத்தம்பி இளங்கோவன் (@Ela_asaithambi) September 21, 2022