Categories
மாநில செய்திகள்

மிரட்டும் காய்ச்சல்….. நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்…. அரசு விடுமுறை அளிக்குமா….????

பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்ச பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள்.

சென்னை மட்டுமல்லாமல் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நூற்றுக்கணக்கான பெற்றோர் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அரசு உடனடியாக போதிய மருத்துவர்களை நியமிக்கவும், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் விடுமுறை விடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |