சேலம் மாவட்டத்தில் கூனாண்டியூர் பகுதியில் 24 வயதுடைய முதுகலை பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியில் வசித்து வரும் பொக்லைன் ஆபரேட்டர் சுபாஷ் சந்திரபோஸ் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து அவர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு திருமணம் குறித்து பேச சென்றுள்ளார். ஆனால் பெண் வீட்டிலோ இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே கூறினால் அப்பெண்ணை கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 5 தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து அந்தப் பெண் தனக்கு வாழ்க்கை தருமாறு சுபாஷ் சந்திர போஸிடம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு சுபாஷ் சந்திர போஷும் அவரது குடும்பத்தினரும் இணைந்து திருமணம் குறித்து இங்கு பேச வந்தால் கொன்று புதைத்து விடுவோம் என பெண் வீட்டாரை மிரட்டியுள்ளனர். இதனால் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சுபாஷ் சந்திர போஷை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.