திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே நாங்குநேரி வானமாமலை மடத்திற்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இதனை தனி நபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வந்துள்ளார். அந்த இடத்தில் வனவிலங்குகள் புகாதவாறு மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வனக்காப்பாளர் கருப்பசாமி தோட்டத்தில் அமைத்திருந்த மின் வேலிகளை சேதப்படுத்தியும் அதை தடுக்க முயன்ற பெண்ணை அவதூறாக பேசியும் தோட்ட மேலாளர் ஐயப்பனுக்கு கொலை மிரட்டலும் அளித்துள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து வனகாப்பாளர் கருப்பசாமி மீது 5 குற்றங்களின் பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.