தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும். மேலும் அவ்வாறு மின் விநியோகம் தடை படும் பகுதிகளுக்கு முன்னதாக மின் வாரியம் சார்பாக அறிவிப்புகள் தெரிவிக்கப்படும். அது மட்டுமல்லாமல் மின்சாரம் தடைபட்டாலும் இன்வெர்ட்டரை வைத்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்களின் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும்.இந்த நிலையில் தற்போது தாழ் அழுத்த மின் இணைப்பைப் பொறுத்தவரையில் தமிழக மக்கள் விலைப்பட்டியலில் மாற்றம் செய்ய நேரடியாகச் சென்று விண்ணப்பித்து வந்து கொண்டிருந்த நிலையில், இனி இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இந்தநிலையில் வீடு, தொழில், வணிகம் என தாழ்வழுத்த மின் இணைப்பில் உள்ள விலைப்பட்டியலை மாற்ற விரும்புவோர் ஜூன் 1-ஆம் தேதி முதல் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் சென்று மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 7 நாட்களுக்கு விலைப்பட்டியல் மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.