தமிழகம் முழுவதும் மின் பயன்பாட்டை கணக்கு எடுத்ததும் உடனடியாக கட்டணத்தை தெரிவிக்க மொபைல் செயலியை மின் வாரியம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதால் விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் கணக்கீட்டாளர் மின் பயன்பாட்டை கணக்கெடுத்து செயலியில் பதிவிட்டால் உடனே அதற்கான கட்டணம் கணக்கிடப்பட்டு மின்வாரிய சர்வர் மற்றும் நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனவே இனி எளிதாக மின் கட்டணத்தை மக்களே வீட்டில் இருந்தபடி கணக்கிட முடியும். இது விரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories
மின் கட்டணம்…. தமிழகம் முழுவதும் விரைவில்…. அரசு புதிய அதிரடி….!!!!
