துறையில் மின்சார துறையில் கேங்மேன் பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் முறை பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நேரடி நியமனம் மூலம் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மின்கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளுக்கான உடற்கல்வி தேர்வில் தோல்வியடைந்த பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சங்கங்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் வழங்க உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்துறை அதிகாரிகள் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.