Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டுமா?…. நாளை தீர்ப்பளிக்கிறது உயர் நீதிமன்றம்….!!!!!

மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண் இணைப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில்  2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அதில் விவசாயிகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு தமிழக அரசு 100 யூனிட் இலவச  மின்சாரம் வழங்கியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இலவச மின்சாரத்தை  பெற ஆதார் எண்ணுடன் மின்  எண்ணை  இணைக்க வேண்டும் என  மின்சார வாரியம் அறிவித்தது. இதுகுறித்து தேசிய மக்கள் கட்சி தலைவர்  ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது  ” மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது. அதில்  வீட்டு உரிமையாளரின் ஆதார் எண் தான் இணைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் வாடகை வீட்டில் இருப்பவர்களின் எண்ணை  இணைத்தால் அவர்கள் காலி செய்யும்போது பிரச்சினை ஏற்படும். எனவே தமிழக அரசு மின் இணைப்பு எண்ணை  இணைக்கும் படி வலியுறுத்த கூடாது. மேலும் தமிழக அரசு வெளியிட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும்” என அந்த மனுவில்  கூறப்பட்டிருந்தது. இந்த மனு  இன்று தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை  நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |