தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக பல வதந்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக விளக்கம் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நவீன மாயமாக்குவதற்காகவும் தரவுகளை சேகரிப்பதற்காகவும் ஆதார் எண் இணைக்க கோரப்படுகிறது.
இந்த விவரங்களை சேகரிப்பதன் மூலம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறோம் எவ்வளவு கொள்முதல் செய்கிறோம் எவ்வளவு கணக்கீடு செய்கிறோம் மீதம் இருப்பது எவ்வளவு என்பது போன்ற கணக்கீடுகளை மேற்கொள்ள முடியும். அதற்காகவே ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.