Categories
மாநில செய்திகள்

இனி மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு?….. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!!!

மின் இணைப்பு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல் கேட்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோன்று சுமார் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு அந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற முறையும் தொடர்கிறது. மின்சாரத்திற்காக வருடத்திற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்குகிறது.

இந்த நிலையில் ஒரே நபர் 2, 3 மின் இணைப்புகள் வாயிலாக மானியம் பெற்று பயன் பெறுவதாக மின் வாரியத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இதன் காரணமாக மின் இணைப்பு உடன் ஆதார் எண்ணை இணைப்பதன் வாயிலாக மோசடிகளை கண்டுபிடிக்க முடியும். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தமிழக அரசின் கொள்கை முடிவு எடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |