Categories
மாநில செய்திகள்

மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான தொகுப்பூதியம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மின் வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சிக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரிகள் பேசியதாவது, மின் வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு மாதம் 4,984 ரூபாயும், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் 3,542 ரூபாயும் குறைந்தபட்ச தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டதையடுத்து, பட்டதாரிகளுக்கு 9,000 ரூபாயும், டிப்ளமோ பயின்றவர்களுக்கு 8,000 ரூபாயும் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை ஏப்ரல் மாதம் 2021-ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும். நிலுவைத்தொகையை இந்த தேதியில் இருந்து கணக்கிட்டு தொழில் பழகுநர் பயிற்சியில் இருப்போர் பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |