மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு துணைமின் நிலையத்தில் 10 மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றி ஒன்றும், 16 மெகாவாட் திறன்கொண்ட மின் மாற்றி 2 என 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு மணல்மேடு, திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ராதாநல்லூர், ஆத்தூர், முடிகண்டநல்லூர், திருவாளப்புத்தூர், சித்தமல்லி உள்ளிட்ட பகுதிகளின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 10 மெகாவாட் திறன்கொண்ட மின்மாற்றியில் தீ பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் அணைக்க முடியாததால் மயிலாடுதுறையில் இருந்து நுரை கலவை வாகனம் வரவழைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் மணல்மேடு சுற்றுவட்டார பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.