கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திடீரென மின்னல் தாக்கியதால் ஆட்டுக் கொட்டகை பற்றி எரிந்து 65 ஆடுகள் உடல் கருகி உயிரிழந்தன.
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செல்லூர் என்ற கிராமத்தில் சின்னையன் என்ற விவசாயி வசித்து வருகிறார். ஏராளமான ஆடுகளை வளர்த்து கொண்டிருக்கும் அவர், நாள் முழுவதும் பகல் நேரத்தில் ஆடுகளை வயல் வெளியில் வைத்துவிட்டு மாலை நேரமானதும் கொட்டகையில் அடைத்து விடுவார். அவ்வாறு நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் கொட்டகையில் அடைத்து வைத்தார். நேற்று அப்பகுதியில் இரவு முழுவதும் பலத்த இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.
அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் ஆட்டுக் கொட்டகை பற்றி எரியத் தொடங்கியது. அதில் அடைக்கப்பட்டிருந்த 65 ஆடுகள் உடல் கருகி பரிதாபமாக இறந்து போயின. அதனைக் கண்ட விவசாயி சின்னையன் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினரும் அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். இதுபற்றி அறிந்த குமரகுரு எம்எல்ஏ நேரில் சென்று சின்னையாவுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.