Categories
அரசியல்

‘மின்தடை….. சொகுசு பங்களா”….. ட்விட்டரில் மல்லுக்கட்டும் சீமான், செந்தில்பாலாஜி….!!!!

திமுகவின் ஓராண்டு சாதனை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக விமர்சித்த நிலையில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து வருகிறார்.

கடந்த 7ஆம் தேதி அதிமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பலரும் முக ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் திமுக அரசின் இந்த ஓர் ஆண்டு ஆட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்திய பிரச்சனையான மின்வெட்டை குறித்து பலரும் சமூக ஊடங்களில் திமுக அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில்ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!” என்று சுட்டிக்காட்டி பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு ‘உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் மின்சாரத்துறை அமைச்சர் “மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற ‘குடிசையில’ அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!” என பதிவிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு மீண்டும் செந்தில்பாலாஜி “குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே! விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு. அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்! எனப் பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரும் மாறி மாறி தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது டுவிட்டரில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியின் திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியும் விமர்சனம் செய்துள்ளார். “மின்சாரத்துறை அமைச்சர் தங்கி இருப்பது அரசு பங்களா அதில் தங்க வேண்டும் என்றால் தேர்தலில் ஜெயிக்க.. ஜெயிக்க..ஜெயிக்க வேண்டுமே..நமக்கு தான் சொந்த ஊர் அரனையூர் வார்டிலயே 4 வாக்கு தான் விழும் என்ன செய்யலாம் சீமான் அண்ணாதே…” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Categories

Tech |