இன்றைய காலத்தில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக அதிகளவில் எரிபொருட்களின் புகை வெளியேறி காற்று மாசடைந்து வருகிறது. இவ்வாறு காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முனைப்பில் கோவா அரசு செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில் மின்சார வாகனங்களுக்கு மானியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆண்டுதோறும் 10,000 இருசக்கர வாகனங்களுக்கும், 500 மூன்று சக்கர வாகனங்கள், 500 நான்கு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.