Categories
உலக செய்திகள்

மின்க் என்ற விலங்கால் வீரியம் மிக்க கொரோனா வைரஸ் …!!

மின்க் எனப்படும் ஒரு விலங்கினம் வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருக்கும் என்று அச்சம் ஆறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்.

மின்க் என்ற விலங்கு நீர் நாயைப் போன்று ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஒரு உயிரி இயற்கையாக காடுகளில் நீர்நிலைகளின் அருகே கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய விலங்காக இது உள்ளது. மிக மெல்லிய ரோமங்களைக் கொண்ட இந்த விலங்கின் தோல் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுவதால் தோலுக்காவே இந்த விலங்கை பண்ணைகளில் வளர்க்கும் வழக்கம் டென்மார்க், ஸ்வீடன், சுவீட்லாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மின்க்கின் தோல் பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட பின் பல்வேறு பயன்பாடுகளுக்காக விற்பனை செய்யப்படுகிறது.

இதன் தோலை கொண்டு குளிர் தாங்கும் ஸ்வெட்டர்கள், கம்பளிகள், மென்மையான முடிகளுடன் கூடிய விலை உயர்ந்த பொம்மைகள், தோல் பைகள், காலணிகள் என ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் மனிதர்களிடமிருந்து கொரானா வைரஸ் இந்த விலங்குகளுக்கு எளிதில் பரப்புவதாகவும் பின்னர் அந்த வைரஸ் வீரியமிக்க கிருமியாக மாறுவதாகவும் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தடுப்பூசி கண்டு பிடித்தாலும் கூட கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

டென்மார்க்கில் முதன்முதலாக இதுபோன்ற வீரியமிக்க கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஒரு கோடியே 70 லட்சம் மின்க்குகளை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இதற்கான வழி முறைகளும் உருவாக்கப்பட்ட நிலையில் இதே போன்ற ஆபத்து மேலும் ஐந்து நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. மேலும் இது குறித்து ஆய்வு நடத்தவும் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |