வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேவூர் ரயில் நிலையத்தில் மின் வழித்தடங்களில் திடீரென கம்பி அறுந்து விழுந்துள்ளது. சுமார் 4 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தினால் அந்த வழியாக சென்ற சென்னை கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மீது கம்பி விழுந்துள்ளது. இருந்தபோதிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கம்பி அறுந்து விழுந்ததுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காட்பாடி ரயில் நிலைய பொறியாளர் குழு அறுந்து விழுந்த கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் சென்னை -பெங்களூர், சென்னை- கோவை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
Categories
மின்கம்பி அறுந்து விபத்து…. ரயில் சேவை பாதிப்பு… பயணிகள் கடும் அவதி…!!!!!
