தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் , வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் வீட்டு உபயோக மின்கட்டணம் 2000 ரூபாய்க்கு மேல் இருந்தால் இனி ஆன்லைனில் செலுத்துவது கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை, குத்தகைக்கு விடப்பட்டதை தவிர மற்ற கூடுதல் மின் இணைப்பிற்கு மாதம் 225 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும், ஒழுங்குமுறை ஆணையம் எப்போது தெரிவிக்கிறார்களோ அப்போது மின் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.