Google நிறுவனம் அக்டோபர் 6-ஆம் தேதி “made by google” பெயரில் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற google I/O 2022 நிகழ்வில் இந்த ஆண்டு பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்வதாக google அறிவித்தது. இந்நிலையில் பிக்சல் டேப்லெட் மாடல் ஒன்றை google உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் 2023 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் google நிறுவனம் சிறிய ஸ்கிரீன் கொண்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நெய்லா எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் வைக்கப்படுகிறது. இவை தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.