துர்சான்பே மாவட்டத்திலிருந்து திருமண நிகழ்வுக்காக பயணிகளை மினி பஸ் ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது துருக்கியில் உள்ள பலிகேரியில் உள்ள சிட்டி சென்டரில் சென்று கொண்டிருந்த மினிபஸ் பால் ஏற்றி வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்ப பட்டத.
இந்த விபத்து நடந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பலிகேசரி கவர்னர் ஹசன் சில்டாக் கூறியது, கனமழை மற்றும் முறையற்ற பாதை மாற்றத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். மேலும் விபத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து சட்ட அமலாக்கம் விசாரித்து வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.