மிதுன ராசி அன்பர்களே..!!! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசவேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கக்கூடும். இன்று துடிப்புடன் வேகமாக செயலாற்றுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது.
சொத்து சம்பந்தமான காரியதடை விலகிச்செல்லும். பயணங்கள் மூலம் நன்மை ஏற்படும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாகவே இருக்கும். அதே போல வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல வேலை கிடைக்கும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
காரியத்தை இன்று சிறப்பாகவே செய்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்