Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு… மனக்குழப்பம் நீங்கும்.. அன்பு தொல்லைகள் வரக்கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனக்குழப்பம் மாறும் நாளாகவே இருக்கும். பொருளாதார விருத்தி உண்டாகும். மறைமுக போட்டிகளை சமாளிக்க கூடும். அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைகள் வந்துசெல்லும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். இன்று தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் கொஞ்சம் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழலும் அமையும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். கூடுமானவரை பயணத்தை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள், அதனால் எந்தவித உபயோகமும் இல்லை. அது மட்டும் இல்லாமல் எதிர்பாராத சில பால்ய  நண்பர்களை நீங்கள் சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்களின் அன்புத்தொல்லைக்கு  ஆளாகக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். சிவ பெருமான் வழிபாட்டை இல்லத்திலேயே நீங்கள் வழிபட்டு வரலாம்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |