மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வீண் அலைச்சல்களால் ஓய்வு கொஞ்சம் குறையும். இன்று தாய் தந்தையரின் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் இருப்பதில் சிரமம் இருக்கும். புதிய முயற்சிகளை தயவுசெய்து கைவிட்டு விடுங்கள். மீண்டும் இன்னொரு நாட்களில் நாம் பார்த்துக் கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று கூடுவார்கள், அன்பு கூடும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.. ஆன்மீக பணியில் நாட்டம் செல்லும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில் அமையும். இன்று செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியம் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்