Categories
உலக செய்திகள்

மிட்டாய் சாப்பிட்டால் ரூ.62 லட்சம் சம்பளம்….. ஆனா ஒரு கண்டிஷன்….. இணையத்தை கலக்கும் விளம்பரம்….!!!!

கனடாவை சேர்ந்த மிட்டாய் நிறுவனம் ஒன்று மிட்டாயை சாப்பிட்டு பார்ப்பதற்கு 62 லட்சம் சம்பளம் வழங்குவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கனடாவை சேர்ந்த கேண்டி ஃபன் ஹவுஸ் என்ற மிட்டாய் நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந் நிறுவனத்தின் தலைமை மிட்டாய் அதிகாரிக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் கனடா டாலர் சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 62 லட்சம் ரூபாயாகும். இந்த வேலைக்கு சேரும் நபர் ஐந்து வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.அது மட்டுமல்லாமல் மிட்டாய்கள் மீது தீரா காதல் கொண்டவர்கள் மட்டுமே இந்த வேலையில் சேர முடியும் என்று நிறுவனம் கண்டிஷன் போட்டு உள்ளது.

Categories

Tech |