பிரபல தெலுங்கு நடிகர் வேதம் நாகையா உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார்.
பிரபல தெலுங்கு நடிகர் நாகையா (77) உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், ஆந்திராவின் குண்டூரில் உள்ள தேச்சவரம் கிராமத்தில் காலமானார். இவர் அல்லு அர்ஜுன் நடித்த வேலன் படத்தின் மூலம் பிரபலமானவர். மேலும் ஸ்பைடர், பாகமதி, நாகவல்லி, ராமையா, ப வஸ்தேவயா, ஏ மாயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.