பிரபல மலையாள வில்லன் நடிகர் ரிசபாவா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 60. மலையாளத்தின் வில்லன் நடிகராகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் பிரபலமாக அறியப்பட்டவர். இவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக பாதிப்பால் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொச்சியில் உள்ள அவரது சொந்த ஊரான முண்டம் வேலியில் அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.