Categories
இந்திய சினிமா சினிமா

மிக பிரபல நடிகர் மருத்துவமனையில் திடீர் அனுமதி… அதிர்ச்சி…!!!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் மெகா சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். தன் நடித்து வரும் படங்கள் பற்றிய விவரங்களை அவர் தனது ரசிகர்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அமிதாப் பச்சன் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவரது ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |