திருமணத்திற்கு பின் தயாரிப்பாளர் ரவீந்தர், மகாலட்சுமி இருவரும் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்கள்.
மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் தனியார் யூடூப் சேனலுக்கு பேட்டி அளித்த ரவீந்தர் கூறியுள்ளதாவது, எங்களது திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேச காரணம் இரண்டு வருஷமா காதலித்ததும் எங்கள் காதல் விவகாரம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டோம். இப்போது திடீரென எங்கள் திருமணம் நடந்து இருப்பதால் கண்டபடி விமர்சிக்கின்றார்கள். நான் தயாரிப்பாளர் என்பது அவர்களின் பிரச்சனை இல்லை. குண்டாக இருப்பதால்தான் இப்படி விமர்சனம் செய்கின்றார்கள்.
திருமணத்திற்கு பின்பு ஒரு கமெண்ட் படித்தேன். அதில் யோவ் அந்த பொண்ணு மேல நீ படுத்த அவ்வளவுதான் என இருந்தது. இது எவ்வளவு மோசமான பதிவு. ஆனால் அதை பார்த்த உடனே எனக்கு என்ன தோன்றியது என்றால், அவ என் மேல படுத்தா வாட்டர் பெட் மாதிரி இருக்கும் என்று சொல்லத்தான் தோன்றுகின்றது. இப்படி எங்களது திருமணம் பற்றி நிறைய ட்ரோல்கள் உலா வருகின்றது என கூறியுள்ளார்.