5ஜிசேவை இந்தியாவில் மிகப் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சேவை இன்னும் முழுமையாக பெற தொடங்காத காரணத்தினால் தற்போது அதை பயன்படுத்த காத்திருக்கின்றார்கள். 5ஜி சேவையின் சிறந்த அனுபவத்தை பெறுவதற்கு நீங்கள் 5 ஸ்மார்ட்போனை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 5ஜியை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க விரும்பினால் மலிவு விலையில் கிடைக்கும் 5g ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கே காண்போம்.
Realme 9pro:
இது வாடிக்கையாளர்கள் பட்ஜெட் வரம்பில் வாங்க கூடிய பிரபலமான ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.6 இன்ச் எல் சி டி டிஸ்ப்ளே இருக்கிறது இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தை கொண்டிருக்கிறது. மேலும் செயலியை பற்றி பேசினால் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5g செயலி இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது வாடிக்கையாளர்கள் இதை 18,999 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
Oppo k10:
Oppoவின் இந்த போன் 90ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விதத்துடன் 6.56 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சக்தி வாய்ந்த வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் media tek dimensity 810 5g ஸ்மார்ட் போனில் வலுவான 5000 mah பேட்டரி மற்றும் 33w சார்ஜர் இருக்கிறது. இதன் விலை 16,499 ரூபாய் ஆகும்.
Samsung galaxy M33 5g:
இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் தோற்றம் கொன்ட ஸ்மார்ட்போன் ஆகும் இது 6.58 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெட்ஸ் புதுப்பிப்பு விதத்தைக் கொண்டிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் exyons 1280 செயலியை பெறுகின்றனர் இதன் விலை 16, 999 ரூபாய் ஆகும்.
Poco x4 pro 5g:
இந்த ஸ்மார்ட் போனில் வாடிக்கையாளர்கள் குவால்காம் ஸ்னாகன் 695 செயலியுடன் 8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்தை பெறுகின்றார்கள். இதில் 6.67 இன்ச் 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிலே இருக்கிறது கேமராவை பற்றி பேசும்போது 64 mp முதன்மை டிரிபிள் கேமரா அமைப்பு அதன் பின்புறத்தில் கிடைக்கிறது மற்றும் 16 எம்பி முன் கேமரா கிடைக்கிறது இதன் விலை 16,999 ரூபாய் ஆகும்.