Categories
தேசிய செய்திகள்

மிகக் குறைந்த வட்டியில் நகைக் கடன்…. அதுவும் மொபைல் மூலமே ஈஸியா அப்ளை பண்ணலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்காக எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி விவசாயிகளுக்கு வேளாண் நகை கடன் வழங்கி வருகின்றது. இந்த நகை கடனை பெற விரும்புவோர் எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாக எளிதில் விண்ணப்பிக்கலாம். மிகக் குறைந்த வட்டிக்கு வேளாண் நகை கடன் வழங்கப் படுவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வேளாண் நகை கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடனுக்கு உடனடி ஒப்புதல் கிடைக்கும் என்று எஸ்பிஐ வங்கி உறுதி அளித்துள்ளது.50 கிராம் வரை தங்க நாணயங்களை வைத்து கடன் வாங்கலாம்.

நகையை  பொருத்தவரை தூய்மையின் அடிப்படையில் கடன் தொகை வழங்கப்படும். விவசாயம், பால் உற்பத்தி, கோழி உள்ளிட்ட பறவைகள் உற்பத்தி , மீன் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோர் உள்ளிட்டோர் இந்த வேளாண் நகை கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்த நகை கடன் பெற விரும்புவோர் உங்கள் மொபைலில் எஸ்பிஐ யோனோ ஆப் டவுன்லோட் செய்து அதன் மூலமாக எளிதில் விண்ணப்பித்து பயனடையலாம்.

Categories

Tech |