சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அடுத்து டாப் 5 இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக 5 டாப் இயக்குனர்களில் படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
அந்த வகையில் முதலில் பாலிவுட் இயக்குனரான பால்கி இயக்கத்தில் இசையமைப்பாளராக இளையராஜா இசையமைப்பில் நடிக்கவிருக்கிறார். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி கை கோர்க்கிறது. அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “பீஸ்ட்”. இப்படத்தின் வேலைகள் முடித்த கையோடு சூப்பர் ஸ்டாரோடு இணையவுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பேட்டை இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுக்க உள்ளார். மேலும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தான் தேசிங்கு பெரிய சாமி அவருடன் ஒரு த்ரில்லர் கதையில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக வந்தவர் விநாயக் மகாதேவ் மற்றும் வெற்றிமாறன். அவர் நடிப்பில் மாஸ் காட்சிகள் இல்லாமல் கதைப்போக்கில் ஹீரோக்களை மாசாக காண்பித்தார்கள் ரசிகர்களை கைதட்ட வைத்தது தான் வெற்றிமாறனின் ஸ்டைல். ரஜினி மற்றும் வெற்றிமாறன் கூட்டணி எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த வருடம் முதலிலே மூன்று படங்களை முடித்து 50 முதல் 60 நாட்கள் வரை ரஜினி கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்த வருடம் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.