செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தமிழக தலைவர் அண்ணாமலை, கடந்த இரண்டு வாரங்களாக நடந்திருக்க கூடிய விஷயங்களையும் கூட நம்முடைய பத்திரிகை நண்பர்களுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பது பாரதிய ஜனதா கட்சியின் ஆசை. உங்களுக்கு தெரியும் இந்த 27% இட ஒதுக்கீடு. குறிப்பாக ஆல் இந்திய கோட்டா சீட்டிலேயே மத்திய அரசு நமக்கு கொடுத்திருக்கின்றார்கள். இது சென்னை ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை சென்று, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் ஊர்ஜிதமாகி இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
அதனால் இந்த நேரத்திலே எப்படி இது வந்தது என்ற ஒரு செய்தியை பத்திரிகை நண்பர்களுக்கு மூலமாக தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. நண்பர்களே உங்களுக்கு தெரியும். ஆல் இந்திய கோட்டா என்பது அண்டர் கிராஜுவேட் மெடிக்கல் சீட் ( UG ) எம்பிபிஎஸ் படிக்கும்போது 85% சீட்டுகள் நம்முடைய மாநிலத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, 15% ஆல் இந்திய கோட்டா என்று ஒவ்வொரு மாநில அரசும் வழங்குகின்றது.
அதே போல போஸ்ட் கிராஜுவேட் ( PG ) எம்டி அந்த மாதிரி படிக்கும்போது 50% சீட்டை நாம ஆல் இந்திய அளவில் சரண்டர் செய்கின்றோம். இது 1986இல் தினேஷ்குமார் vs மோதிலால் நேரு மெடிக்கல் காலேஜ் அலகாபாத் அப்போது சுப்ரீம் கோர்ட் சென்று, சுப்ரீம் கோர்ட்டில் ஊர்ஜிதம் செய்து, 1986 சுப்ரீம் கோர்ட்டு முதல் முதலாக ஆல் இந்திய கோட்டாவை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிர்ப்பந்திக்கிறது.
அப்போது அண்டர் கிராஜுவேட் மெடிக்கல் சீட் ( UG )க்கு 15 சதவீதமும், போஸ்ட் கிராஜுவேட் ( PG )க்கு 25%, ரிசர்வேஷன் இல்லாமல் மூலம் மெரிட் மூலமாக தான் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி இருந்தது. அதன் பின்பு நமக்கு தெரியும். அது முடிந்த பின்பு சில காலத்திலேயே குறிப்பாக 2007இல் நடந்த கேஸில் முதன் முதலாக நம்முடைய எஸ்சி/ எஸ்டி சமுதாய மாணவர்களுக்கு ஆல் இந்திய கோட்டாவில் தகுதி இருக்கு என்று சுப்ரீம் கோர்ட்டில் ஆர்டர் வந்தது.
31. 01.2007 வரை ஆல் இந்தியா கோட்டாவில் நம்முடைய எஸ்சி/எஸ்டி சகோதர சகோதரிகளுக்கு வாய்ப்பு வந்தது. 2006இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சென்ட்ரல் எஜுகேஷன் ரிசர்வேஷன் அட்மிஷன் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து, மத்திய அரசினுடைய உயர்கல்வி, ஐஐஎம்/ ஐஐடிக்கு 25% ஓபிசி ரிசர்வேஷன் கொண்டு வந்தார்கள்.
ஆனால் ஆல் இந்திய கோட்டாவில் 20% ரிசர்வேஷனை கொண்டுவரவில்லை. அதன்பின்பு 2015இல் சலோனி குமார் கேசில் ஓபிசி அவர்களுக்கும் கூட ஆல் இந்தியா கோட்டாவில் ரிசர்வேஷன் கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சென்று இருந்தார். அப்போது சுப்ரீம் கோர்ட் மத்திய அரசினுடைய கருத்தை கேட்ட போது, நம்முடைய மத்திய அரசு நேரடியாக 2016/ 2016இல் ஓபிசி ரிசர்வேஷனில் ஆல் இந்திய கோட்டாவில் ரிசர்வேஷன் கொடுக்க வேண்டும் என சொல்லியது.
ஆனால் இதே சுப்ரீம் கோர்ட் 1986இல் மெரிட் பேஸ்ட் என்று சொல்லியிருந்தீர்கள். இதே சுப்ரீம் கோர்ட் 2007இல் எஸ்சி/எஸ்டி சமுதாய மக்களுக்கு மட்டும்தான் இந்த ரிசர்வேஷன் பொருந்தும். மத்திய அரசு வேறு யாருக்கும் கொடுக்க கூடாது என்றுசொல்லி இருந்தீர்கள். அப்படி இருக்கும்போது முடிவு மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதன் பின்னாடி நம்முடைய சென்னை உயர்நீதிமன்றத்தில் நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், சிபிஐ, சிபிஎம் போன்ற அனைத்து கட்சிகளும் கூட உடனடியாக 27% ஒபிசி ரிசர்வேஷன் கொடுக்க வேண்டும். 2015 -16 இல் மத்திய அரசு கொடுத்த அப்பிடவிட்டை, சுப்ரீம் கோர்ட், ஹை கோர்ட் ஊர்ஜிதம் செய்யவேண்டும் என்ற கேசில், ஹை கோர்ட் தீர்ப்பு கொடுத்தபோது, ஒரு குழுவை அமைத்து குழு மூலமாக ஒரு முடிவெடுக்கும்மாறு அறிவுறுத்தி இருந்தது.
அந்தக் குழுவிலே பங்குபெற்ற மத்திய அரசினுடைய அதிகாரிகள் 27% ஓபிசிக்கு கொடுக்க வேண்டும் என்று தெரியப்படுத்தி இருந்தார். அப்போது இரண்டு விதமான தீர்ப்புகளை அந்த குழு முன்மொழிந்திருந்தது.
1. அந்தந்த மாநிலத்தில், அந்த மாநிலம் என்ன ரிசர்வேஷன் கேட்டகிரி ? வைத்திருக்கிறார்களோ, அதை செயல்படுத்த வேண்டுமா ? அல்ல
2. இந்தியா முழுவதும் ஆல் இந்திய கோட்டாவிற்கு ஒரே ரிசர்வேஷன் கேட்டகிரி செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசு மத்திய அரசிடம் வேகமாக ஒரு முடிவை எடுக்குமாறு சொல்லியிருந்தது.
அதன் பின்பு நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் அக்டோபர் 2021 27% ஒப்பிசி ரிசர்வேஷன் ஆல் இந்திய கோட்டாவில் செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தார். இது சுப்ரீம் கோர்ட்தில் சமீபத்தில் ஊர்ஜிதமாகி நடப்பாண்டில் இருந்து அட்மிஷன் வருகின்றது. இதுவும் கூட நம்முடைய தமிழக மக்களுக்கு, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அற்புதமான செய்தியை அரசு செய்து இருக்கின்றது என்பதை நம்முடைய பத்திரிக்கை நண்பர்கள் சார்பாக, இந்த பிரஸ்மீட் மூலமாக தமிழக மக்களுக்கு தெரியப்படுத்துவது எங்களுடைய கடமை என அண்ணாமலை தெரிவித்தார்.