Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் இயக்குனருடன் இணைந்த அருண்விஜய்…. வெளிவந்த அட்டகாசமான தகவல்…!!

நடிகர் அருண் விஜய் மாஸ் இயக்குனர் ஹரியுடன் இணைந்து படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அருண் விஜய் ஹீரோவாக நடித்த  குற்றம் 23 தடையறத் தாக்க போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது. ஆனாலும் இவர் நடித்த சில படங்கள் இவருக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை அதில் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த மாஃபியா திரைப்படம் எதிர்பார்த்த  வெற்றி பெறவில்லை என்று கூறபடுகிறது .

இந்நிலையில் மாஸ் ஆக்ஷன் இயக்குனரான ஹரியுடன் அருண் விஜய் தற்போது  ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொடங்கப்படும் என்றும்  இப்படத்தை முடித்துவிட்டு தான் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை இயக்குனர் ஹரி தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |