மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அனுமதியின்றி மற்றொரு நிறுவனத்தின் பாடல்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
தமிழ் திரைப்பட சில பாடல்களின் காப்புரிமையை மும்பையிலுள்ள நோவெஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்நிறுவனத்தின் பாடல்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நோவெஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளது. மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி மாஸ்டர் பட தயாரிப்பாளர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.