விஜய்யின் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது . மேலும் இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 78 ஆயிரம் லைக்குகளை பெற்றது.
இந்நிலையில் பீஸ்ட் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்திய அளவில் மிக வேகமாக அதிக லைக்குகளை பெற்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளது . இதற்கு முன் நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகளை பெற்றிருந்தது . தற்போது மாஸ்டர் பட சாதனையை பீஸ்ட் படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.