மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்ன தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் லலித் கைப்பற்றியுள்ளது. கொரோனா காரணமாக திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போனதால் பலரும் OTT யில் திரைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளனர். தற்போது தியேட்டர்கள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் படம் எப்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இணை தயாரிப்பாளர் லலித்குமார் கூறியதாவது: “மாஸ்டர் திரைப்படம் நெட் பிளக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டரில் ரிலீஸ் செய்வதா அல்லது நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்வதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் மாஸ்டர் படம் ரிலீஸ் பற்றிய செய்தி மகிழ்ச்சி அளித்தாலும், தியேட்டரில் மாஸ்டர்கள் ரிலீசாகும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது.