தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை கமல்ஹாசன், ஆர்யா, சூர்யா, அரவிந்த்சாமி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் மிகப்பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர் . அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.
மேலும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை கன்னடத்தில் நடிகர் சுதீப் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காத தமன்னா முதல் முறையாக மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.