கொரோனா வைரஸ் பரவாத செவிலியர் ரோபோ ஒன்றினை இளம் பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
எகிப்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்று பரவாத ஒரு சூப்பரான செவிலியர் ஒருவர் உள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்வதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ளார். அவருடைய பெயர் Cira -03. இந்த செவிலியர் ரோபோவை எகிப்திய இளம் பொறியாளரான Mahmoud el-komy என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோவான cira நோயாளியின் நாடியைப் மென்மையாக பிடித்துக் கொண்டு அவர்களிடம் சளி அல்லது ரத்த மாதிரி சேகரிக்கும் அழகே தனி.
செவிலியர் cira ரோபோ கொரோனா நோயாளியிடமிருந்து ரத்த மாதிரியை சேகரிப்பார் மற்றும் எக்ஸ்ரே எடுப்பார், அது மட்டுமல்லாமல் ஆங்கில படங்களில் வருவது போல சோதனை முடிவுகளை தன்னுடைய மார்பிலேயே காட்டி விடும். அத்துடன் மனிதன் போன்ற முகமும், கைகளும் கொண்ட செவிலியர் cira ரோபோ “மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்” என்று கூறும்போது யாராவது மாஸ்க் அணியாமல் இருக்க முடியுமா?.
மக்களுக்கு ரோபோ என்றாலே ஒருவித பயம் இருக்கும். ஆனால் இங்கு மக்கள் உண்மையான செவிலியர்களை விட மனித முகம் கொண்ட இந்த cira ரோபோவை அதிகம் விரும்புகிறார்கள். cira ரோபோ தற்போது தனியார் மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருக்கிறார். மத்திய அரசு ciraவுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இதுபோன்று பல ciraக்களை உருவாக்குவதாக அந்த இளம் பொறியாளர் கூறியுள்ளார்.