மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்திற்கு வந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் தற்போது ரயில் சேவை தொடங்கியுள்ளது. தற்போது சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றது. அதிலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்கும் முடியும்.
ரயில் சேவைகள் தற்போது இயங்கி வருவதால் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் முகக் கவசம் அணியாமல் வந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப் படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ” கொரோனாவை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது இந்நிலையில் தற்போது முக கவசம் அணியாத பயணிகளுக்கு 500 அபராதம் விதிக்க வேண்டும்” என்று ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.