Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்க்கும் மாலையுமாய் ராதிகா- சரத்குமார்… காஞ்சி காமாட்சி கோயிலில் பூஜை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகாவுடன் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர் .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சரத்குமாருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது . இதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நடிகர் சரத்குமார் குணமடைந்தார் . இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நடிகர் சரத்குமாரும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவும் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர் . இருவரும் அங்கு உள்ள கோவிலில் மாலையணிந்து பூசாரிகள் பூஜை செய்து அவருக்கு பிரசாதம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் முக்கியமாக கொரோனா  வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி இருவரும் மாஸ்க் அணிந்து நிற்கின்றனர். இது குறித்து தனது டுவிட்டர் பகுதியில் நடிகை ராதிகா ‘காஞ்சி காமாட்சியின் ஆசிர்வாதம் கிடைக்க கோவிலுக்கு வந்துள்ளோம்.  கொரோனாவிலிருந்து சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |