Categories
சினிமா தமிழ் சினிமா

“மாவீரன் படத்தில் நடிப்பதற்கு அதிதி சங்கர் வாங்க இருக்கும் சம்பளம்”…. வெடித்த சர்ச்சை…!!!!!

மாவீரன் திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிதி சங்கர் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும்கின்றார் சங்கர். இவரின் மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இத்திரைப்படத்தை அஸ்வின் இயக்குகின்றார்.

இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்திற்கு அதிதி சங்கருக்கு 25 லட்சம் சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. மேலும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கின்றது. அது என்னவென்றால் அதிதி நடித்த ஒரு திரைப்படம் கூட வெளியாகாத நிலையில் இரண்டாவது திரைப்படத்திலேயே எப்படி 25 லட்சம் சம்பளமாக தரப்பட்டது என பேச்சு கிளம்பியுள்ளது. மேலும் எந்த ஒரு அறிமுக நாயகிகளுக்கும் தரப்படாத சம்பளம் அதிதி சங்கருக்கு மட்டும் ஏன் தரப்பட்டது என விமர்சனம் செய்து வருகின்றார்கள். ஆனால் இதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பது தெரியவில்லை குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |