Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற இருக்கும் குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சிகள்”….. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!!

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப் 1 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றது.

மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டு மையத்தில் விருப்பத்தை கூறலாம். இந்த பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை முதல் நடைபெற இருக்கின்றது என கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |