மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் சார்பாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் “இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவார்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களுடன் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம். இதற்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.