மதுரை அண்ணாநகர் பகுதியில் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை கண்டித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மதுரை மண்டல டாஸ்மாக் பணியாளர்கள் சார்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்டித்து மதுரை அண்ணாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக பணிச்சுமை உள்ள கடைகளில் குறைவான பணியாளர்களையும், குறைவான பணிச் சுமை உள்ள கடைகளில் அதிக பணியாளர்களையும் நியமித்துள்ளதாகவும், ஊழியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் சிறு சிறு குற்றங்களுக்காக தூத்துக்குடியில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசியபோது பணிச்சுமை குறைவாக உள்ள இடத்தில் அதிக பணியாளர்களையும், குறைவான பணிச்சுமை உள்ள இடங்களில் அதிக பணியாளர்களையும் போட்டு இடமாறுதலை ஒரு தொழிலாக இந்த மூன்று மாவட்ட மேலாளர்கள் மாற்றி கொண்டு விட்டார்கள். குறிப்பிட்ட தொகை வாங்காமல் யாருக்கும் இடம்மாற்றம் கிடைக்காது என்ற சூழ்நிலை உருவாக்கி விட்டார்கள். சிறு சிறு குற்றங்களுக்காக 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலே குடோனில் வேலை இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார்கள்.