நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
இதனால் 2022-ஜூன் வரை மாவட்ட எல்லைகளை மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களின் மாவட்ட, தாலுகா, காவல் நிலைய எல்லைகளை மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அனைத்து மாநில யூனியன் பிரதேசங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.