பிரதமர் மோடி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதாவது மாவட்டம்தோறும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் போய் சேர்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டங்கள் பற்றிய மக்களின் கருத்துக்கள் என்ன ? என்பது குறித்து ஆலோசனையில் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் பிரதமர் மோடி இந்த ஆலோசனையின் போது புதிதாக நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன ? என்பது குறித்தும் கேட்டறிவார் என்று பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.